‘பேரன்பும் பெருங்கோபமும்’ பட ட்ரெய்லர் வெளியீடு..!

trailer

இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் நடிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். E5 என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

   

முழுக்க முழுக்க சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், ஆணவக் கொலைக்கு எதிராகவும் இப்படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. ‘என்ன தான் ஓயாய் சிங்க வேஷம் போட்டாலும், உரும முடியாது. ஊழ தான் விடணும்”, “கொலையில என்னம்மா கௌரவம், ஆணவக்கொலைன்னு சொல்லுங்க” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

 

Share this story