விடாமுயற்சி படத்தின் கார் சண்டை காட்சி வெளியீடு

'விடாமுயற்சி' படத்தில் பெரிதும் பேசப்பட்ட கார் சண்டை காட்சி வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியான திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க அஜார்பைஜானில் படம்பிடிக்கப்பட்ட ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் மாஸ் காட்சிகள் பெரிதாக இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'விடாமுயற்சி' படத்தில் பெரிதும் பேசப்பட்ட கார் சண்டை காட்சி வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.