அமெரிக்காவில் 'விடாமுயற்சி' படம் வெளியாகும் தியேட்டர் லிஸ்ட்-ஐ வெளியிட்ட படக்குழு...முன்பதிவு தீவிரம்

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி."
இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது. இப்படத்தின் டிரெய்லர், பிடிஎஸ் வீடியோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
USA, get ready! 🇺🇸 VIDAAMUYARCHI is storming into theatres near you! 🔥 Check out the theatre list and book your tickets to witness the power of perseverance on the big screen. 🤩
— Lyca Productions (@LycaProductions) February 4, 2025
FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar… pic.twitter.com/MGz5rzjtC5
நாளை 'விடாமுயற்சி' வெளியாவதை அடுத்து படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் நாளை வெளியாகும் 'விடாமுயற்சி' படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக திரையரங்க பட்டியலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Get ready, USA! 🇺🇸 PATTUDALA is ready to set the screens on fire. 🎟️ Book your tickets and be part of the triumph! 🔥
— Lyca Productions (@LycaProductions) February 4, 2025
FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/N1QgYCoxvs
மேலும் தெலுங்கு மொழியில் வெளியாகும் 'பட்டுடாலா' திரையரங்க பட்டியலையும் வெளியிடப்பட்டுள்ளது.