'விடாமுயற்சி' : இறுதிக்கட்ட பணிகளில் இசையமைப்பாளர் அனிருத்...!

anirudh

லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது.
 
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி” படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.


லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான சவதீகா மற்றும் பத்திக்கிச்சி ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது இப்படத்தின் வெளியீட்டிற்காக பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


இத்திரைப்படம், சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் விடாமுயற்சி படத்திற்கான இறுதிக்கட்ட இசைக்கோர்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் படத்தின் பின்னணி இசையில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story