விடாமுயற்சி : 'பத்திகிச்சு' பாடலின் ரேசிங் வெர்ஷன் வீடியோ வெளியீடு

விடாமுயற்சி படத்தில் இடம்பெற்றுள்ள 'பத்திகிச்சு' பாடலின் ரேசிங் வெர்ஷன் வீடியோ வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'சவதீகா' மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின.
A blasting #PATHIKICHU race edition 🔥❤️🔥
— Sony Music South India (@SonyMusicSouth) January 28, 2025
An @anirudhofficial musical 🎶
Watch it now 🏆➡️ https://t.co/pmjaPnDrm2#AjithKumar #MagizhThirumeni @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial
#VidaamuyarchiFromFeb6… pic.twitter.com/arWFwW8s8j
இதனையடுத்து, 'விடாமுயற்சி' படத்தின் 2வது 'பத்திக்கிச்சி' என்ற பாடல் வெளியாகி 6 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலானது. இப்படம் வெளியாக இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் 'பத்திகிச்சு' பாடலின் ரேசிங் வெர்ஷன் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பத்திகிச்சு பாடலில் அஜித்குமார் துபாய் கார் ரேஸிங்கில் ஈடுபட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.