'விடாமுயற்சி' படத்தின் சவதீகா Reloaded version பாடலை வெளியிட்ட படக்குழு..!

swadeeka

'விடாமுயற்சி' படத்தில் இடம்பெற்றுள்ள 'சவதீகா' பாடலின்  Reloaded version-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது. 

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது.

null



விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடலும் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து `விடாமுயற்சி’ டிரெய்லரின் பி.டி.எஸ். வீடியோவை படக்குழு நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கியுள்ளதை போஸ்டர் வெளியிட்டு படக்குழு நேற்று அறிவித்தது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடலில் ரீலோடெட் வெர்சனை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this story