விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு; அஜித்துக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய இயக்குனர்..

ajith

அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவித்த பின்னரும், படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இதனால் படம் சொன்னபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? இரண்டு ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா என அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தனர். இப்படியான நிலையில், அஜித் ரசிகர்களுக்கு செம ஸ்வீட்டான அப்டேட்டினை படக்குழு கொடுத்துள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என அதிகாரப்பூர்வமாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு செம குஷியான, அப்டேட்டாக உள்ளது. இந்தத் தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக படக்குழு தெரிவித்துள்ள, அறிவிப்பில், " விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்று அதாவது டிசம்பர் 22ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்கில் ரிலீஸ் ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித் குமாருக்கு எழுதியுள்ள, நன்றி மடலில், " சார், உங்கள் மீது அளவற்ற அன்பும், பெரும் மரியாதையும் உள்ளது. நீங்கள் எங்களின் வழிகாட்டியாக இருந்துள்ளீர்கள். நீங்கள் மிகவும் சாதரணமாக இருந்தே எங்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் கொடுத்துள்ளீர்கள். அதனை ஒட்டுமொத்த விடாமுயற்சி படக்குழுவுக்கும் அளித்துள்ளீர்கள். "பிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டுமா?.. திரிஷா என்ன இப்படி சொல்லிட்டாங்க? " மேலும், தனிப்பட்ட முறையில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் சப்போர்ட்டுக்கும் நன்றிகள். இதனை எனக்கு நிங்கள் முதல் நாளில் இருந்து இந்த கடைசி நாள் வரை கொடுத்துள்ளீர்கள். இதனாலே உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாகியுள்ளது சார்" எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.  

Share this story