'விடாமுயற்சி' கதை என்னுடையது இல்லை : இயக்குனர் மகிழ் திருமேனி

magizh thirumeni

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் நடித்து பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் 'விடாமுயற்சி'. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் திடீரென தள்ளிப் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. 1997ல் வந்த ஹாலிவுட் படமான 'பிரேக் டவுன்' படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கியதில் ஏற்பட்ட சிக்கல்தான் பட வெளியீடு தள்ளிப் போனதற்குக் காரணம் என கூறப்பட்டது. ajith

தற்போது, படம் தொடர்பான பிரச்சனைகள் சுமுகமாக முடிவுக்கு வந்ததால் விடாமுயற்சி படம் வரும் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் கதை தன்னுடையது இல்லை என அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு நேர்காணலில்,  அஜித் சார் மேனேஜர் சுரேஷ் சந்திராவை ரொம்ப வருஷமா தெரி​யும். எனக்கு அவர் சகோதரர் மாதிரி. ஆனா, அஜித் சார்​கிட்டகதை சொல்​லணும்னு வாய்ப்​புக் கேட்​ட​தில்லை. அவர்​கிட்ட கதைசொல்ற அளவுக்கு என் தகுதியை வளர்த்​துக்​கணும்னு நினைச்​சேன். ‘மீகாமன்’ படம் பண்ணும்​போது, அஜித் சாரோட படம் பண்ணுற வாய்ப்பு தொடர்பா ஒரு உரையாடல் நடந்​துச்சு. பிறகு அது தொடரலை. ரோகாந்த் இயக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துல நடிக்​கறதுக்​காக, நான் பழனிக்கு போயிருந்​தேன். அப்ப சுரேஷ் சந்திரா, ‘அஜித் சாருக்கு கதை வச்சிருக்​கீங்​களா? இந்த மாதிரி வேணும்’னு ஒரு ஐடியா சொன்​னார்.
நான் பேசினேன். பிறகு ‘கலகத்​தலை​வன்’ படம் முடிஞ்சு 2 வாரம் கழிச்சி சுரேஷ் சந்திரா, அஜித் சார் உங்ககிட்ட ​பேசுவார்னு சொன்​னார். அந்த தருணத்தை என்னால மறக்கவே முடி​யாது. அஜித் சார் சொன்ன முதல் வார்த்தை, “என்னை கண்மூடித்​தனமா நம்புங்க மகிழ்’! சரின்னு சொன்னேன் நான். இதன் மூலக் கதை என்னுடையது இல்லை. நான் அஜித் சார் நடிப்​பில் பண்ண நினைச்​சது, ஒரு ஆக் ஷன் த்ரில்​லர். இந்தப் படத்தோட கதையை அஜித் சார்​தான் சொன்​னார். அவரோட இமேஜுக்​கும் இந்தப் படத்துல அவர் பண்ணி​யிருக்கிற கேரக்​டருக்​கும் தொடர்பே இல்லை. இது ஒரு மாஸ் என்டர்​டெ​யினர் படம் இல்லை. ரசிகர்கள் அதை எதிர்​பார்த்து வரவேண்​டாம். அஜித் சார் இப்படி படம் பண்ணணும்னு ஆசைப்​பட்​டார்.ak

அவருக்கு இப்ப இருக்கிற பிம்பத்​துக்கு முற்றி​லும் முரண்​பாடா இந்தப் படம் இருக்​கும். இதுல ஒரு சூப்பர் ஹீரோவை எதிர்​பார்த்து வந்தீங்​கன்னா, இது அப்படிப்​பட்ட படமா இருக்​காது. நம்மள்ல ஒருத்தன் ஹீரோவா இருந்தா எப்படி​யிருக்​குமோ அதுதான் படம். நான் ஆக் ஷன் டைரக்டரா அறியப்​பட்​டிருக்​கேன். இப்படியொரு கதைக்​களத்தை எங்கிட்ட ஏன் கொடுக்​கிறீங்​கன்னு அவர்​கிட்ட கேட்க நினைச்​சிருந்​தேன். ஆனா, அந்த வாய்ப்பை எனக்​குக் கொடுக்​காம, அவரே எனக்​குச் சொன்​னார், “மகிழ், நீங்​களும் சரி, நானும் சரி, நம்மளோட ‘கம்ஃ​போர்ட் ஸோன்’ல இருந்து வெளிய வரணும். அப்படியொரு படமா இது இருக்​கணும்“னு சொன்​னார். அவர் கொடுத்த கதையில அந்த மீட்​டருக்​குள்ள என்னால என்ன பண்ண முடி​யுமோ, அதை பண்ணி​யிருக்​கேன். முன் முடிவுகளை கழற்றி வச்சுட்டு இந்தப் படத்தை பார்த்தால், நிச்​சயமா சுவாரஸ்​யமான படமா இருக்கும் என தெரிவித்துள்ளார். 


 

Share this story