முழு படப்பிடிப்பையும் அஜர்பைஜானில் முடிக்க விடாமுயற்சி படக்குழு திட்டம்

முழு படப்பிடிப்பையும் அஜர்பைஜானில் முடிக்க விடாமுயற்சி படக்குழு திட்டம்

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதேநேரம் அஜித்தும் தனது பைக் பயணத்தை தொடங்கி சென்றுக் கொண்டிருந்தார். அதனால் படத்தை லைக்கா கைவிடவுள்ளதாக தகவல் வெளியானது. 

அஜர்பைஜானில்

இதைத்தொடர்ந்து, பைக் பயணம் முடிந்து நடிகர் அஜித் சென்னை திரும்பினார். சிறிய இடைவௌிக்கு பின்னர் அஜித், த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜான் பறந்தனர். 

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முழு படப்பிடிப்பையும் அஜர்பைஜானிலேயே நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். பிரம்மாண்டமாக படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதால், வெளிநாட்டிலேயே மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய இருக்கின்றனர்.

Share this story