'பெருசு' படத்தின் ப்ரோமோ இணையத்தில் வைரல்...!

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள 'பெருசு' படத்தின் நகைச்சுவை ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் பெருசு. இதில், வைபவ், அவரது சகோதரர் சுனில், சாந்தினி, நிஹாரிகா, பாலா சரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படக்குழு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.அதில் வைபவ், சுனில், நிஹாரிகா, ரெடின் கிங்ஸ்லி இடம் பெற்றுள்ளனர். எவ்வளவு பந்துகள் போட்டாலும் ஸ்டம்ப் கீழே விழவில்லை என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.