பீட்டர் பால் என் கணவரே கிடையாது.. நடிகை வனிதா அதிரடி !

vanitha

பீட்டர் பால் எனது கணவரே கிடையாது என நடிகை வனிதா காட்டமாக தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு சொந்தக்காரர் நடிகை வனிதா. சினிமா நடிகையான இருந்த அவர், பின்னர் சீரியல், டிவி ஷோக்கள் என அனைத்திலும் தனது கால் தடம் பதித்தார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் சர்ச்சை அவரை விடாமல் துரத்தி சென்றுக்கொண்டிருக்கும். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷூவல் எபெஃப்ட் இஞ்சினியர் பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்துக்கொண்டார். 

vanitha

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக்கொண்ட அவர், சில நாட்களிலேயே பீட்டர் பாலை பிரிந்தார். இதற்கிடையே தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்துக்கொண்டதாக போலீசில் அவரது முதல் மனைவி புகாரளித்திருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பீட்டர் பாலை பிரிந்து வனிதா தனியாக வாழ்ந்து வந்தார். 

vanitha

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதாவின் முன்னாள் கணவரான பீட்டர் பால் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி இணையத்தளங்களில் வேகமாக வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த செய்தி வைரலானது குறித்து விளக்கமளித்துள்ள வனிதா, தனக்கும், பீட்டர் பாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். 

vanitha

மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக் கொள்ளவில்லை. கடந்த 2020-ஆம் ஆண்டு நாங்கள் சில நாட்கள் மட்டுமே திருமண உறவில் இருந்தோம். அது அதே ஆண்டில் முடிந்துவிட்டது. நான் அவருடைய மனைவியும் இல்லை. அவர் என்னுடைய கணவரும் இல்லை. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன் என்று தனது ட்விட்டர் பதிவில் நடிகை வனிதா தெரிவித்துள்ளார். 

 

 

Share this story