`பீனிக்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

phoenix

விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள `ஃபீனிக்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.  


படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதியை  படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,  `ஃபீனிக்ஸ்'  திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story