ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வெளியானது

ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வெளியானது

சின்னத்திரை நடிகராகன கவின் லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து, அவர் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதைத்தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நடன இயக்குநர் சதீஸ் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதே போல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலனுடம் ஸ்டார் என்ற திரைப்படத்திலும் கவின் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஸ்டார் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வெளியானது

இந்நிலையில், ஸ்டார் படத்திலிருந்து போட்டோ ஆல்பம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. கல்லூரி காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரெய்ட்டி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 

Share this story