ஸ்டார் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்

ஸ்டார் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்

கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்பட படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டார் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்

சின்னத்திரை நடிகராகன கவின் லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து, அவர் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதைத்தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நடன இயக்குநர் சதீஸ் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதே போல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலனுடம் ஸ்டார் என்ற திரைப்படத்திலும் கவின் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஸ்டார் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஸ்டார் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டார் படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
 

Share this story