இன்றைக்கு வெயிட்டான சம்பவம் இருக்கு... 'பிச்சைக்காரன் 2' முக்கிய அறிவிப்பு !

pichaikaran 2

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் தனது அம்மாவிற்காக பிச்சைக்காரன் அவதாரம் எடுப்பதே இந்த படத்தின் கதை. உண்மையில் நடந்த இந்த சம்பவத்தை வைத்து இப்படம் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

pichaikaran 2

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இதுதவிர இந்த படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

pichaikaran 2

இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  

 

 

Share this story