விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன் 2” ரிலீஸ் தேதி அறிவிப்பு.

photo

விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள ‘பிச்சைகாரன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

photo

 கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில், தனது தாயின் உடல்நலனிற்காக  பிச்சைகாரனாக வாழும் ஒரு மகனின் பயணத்தை கதைக்களமாக கொண்டு வெளியான  திரைப்படம் பிச்சைகாரன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் விஜய் ஆண்டனிதான் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் படத்தின் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

photo

 இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்றது.  அந்த சமயத்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டபோது திடீரென விபத்து ஏற்பட்டது. இதில், நடிகர் விஜய் ஆண்டனிக்கு முகம் உட்பட சில இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட முழுவதும் குணமடைந்து விட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சற்று முன்பு படத்திஜ்ன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி படம் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளனர்அன்றைய தினம்தான் ராகவா லாரன்ஸ்ஸின்ருத்ரன்திரைப்படமும் ரிலீஸ்ஸாக உள்ளது

Share this story