விஜய் ஆண்டனிக்கு சென்னையில் சிகிச்சை...

vijay Antony

'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் காயம் அடைந்த விஜய் ஆண்டனிக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்கா தீவில் நடைபெற்றது வந்தது. 

vijay Antony

அதில் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகி காவ்யா தாப்பர் இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அதாவது கடலில் ஓட்டப்படும் ஜெட் ஸ்கை எனப்படும் பைக்கில் விஜய் ஆண்டனியும், காவ்யா தப்பாரும் செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியை எடுக்க முயற்சித்த போது ஜெட் ஸ்கை மீது மற்றொரு ஜெட் ஸ்கை மோதியது. 

இந்த விபத்தில் விஜய் ஆண்டனியின் முகம், உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நடிகை காவ்யா தாப்பருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து உடனடியாக கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று மாலை விஜய் ஆண்டனி சென்னை அழைத்து வரவிருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது. 

 

Share this story