படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு காயம்... பதறிய படக்குழுவினர் !

vijay Antony

'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு காயம்‌ ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் தனது அம்மாவிற்காக பிச்சைக்காரன் அவதாரம் எடுப்பதே இந்த படத்தின் கதை. உண்மையில் நடந்த இந்த சம்பவத்தை வைத்து இப்படம் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

vijay Antony

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா உள்ள லங்கா தீவில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அப்படி படப்பிடிப்பு நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story