‘நீங்க போட்ட பிச்சை தான் ‘பிச்சைக்காரன்’ - இயக்குனர் சசியிடம் கலங்கிய விஜய் ஆண்டனி !

Pichaikkaran 2

இயக்குனர் சசி கொடுத்த கொடுத்த பிச்சை தான் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்த படம் வரும் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. 

pichaikaran 2

அப்போது இயக்குனர் சசியிடம் சுவாரஸ்யமான விஷயங்களை விஜய் ஆண்டனி பேசினார். அதில் ‘டிஷ்யூம்’ படத்தில் நீங்கள் கொடுத்த வாய்ப்பால் தான் நான் சினிமாவிற்குள் வந்தேன். பிச்சைக்காரன் திரைப்படம் நீங்கள் போட்ட பிச்சை. எத்தனை திரைப்படங்கள் நடித்தாலும் அது போன்ற திரைப்படம் மீண்டும் வராது. 'பிச்சைக்காரன்' படத்தில் கதையை முதல் முதலில் சொன்ன போது எந்த அளவிற்கு ஆத்மார்த்தமாக சொன்னீர்கள் என்பது எனக்கு தெரியும். 

 பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் நீங்கள் தான்‌ இயக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் வேறு வழியில்லாமல் இந்த படத்தை நான் இயக்கி உள்ளேன். முதலில் 10 நாட்கள் நான் நினைத்த மாதிரி படம் அமையவில்லை. அதன்பிறகு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நான் நினைத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக படம் வந்தது. அதனால் படம் இயக்குவதை நன்றாக கற்றுக் கொண்டேன். பிச்சைக்காரன் படத்தின் காப்பியாகத்தான் இந்த படத்தை இயக்கி உள்ளேன். ஏராளமான நேர்காணலில் படங்களை இயக்குவீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதிலளித்துள்ளேன். ஆனால் தற்போது சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது என்று கூறினார். 

 

 

 

Share this story