ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிரச்சினை... 'பிச்சைக்காரன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பு !

pichaikaran 2

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தின் ரிலீஸ் மற்றும் டிரெய்லர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‌விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

pichaikaran 2

விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆன்ட்டி பிகிலி கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.  தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படம் கடந்த தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் 'பிச்சைக்காரன் 2' எதிராக அடுத்தடுத்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளில் சமரச தீர்வு ஏற்பட்ட நிலையில் வரும் மே 19-ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு  நாளை காலை 11 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ‌ 

Share this story