குபீரென சிரிக்க வைக்கும் யோகிபாபு.. ‘பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக் காட்சி !

Pichaikkaran 2

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படத்தை அவரது மனைவியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pichaikkaran 2

இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Pichaikkaran 2

இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இப்படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி வெளியான நிலையில் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. யோகிபாபுவின் குலுங்க வைக்கும் காமெடியில் உருவாகியுள்ள இந்த காட்சி வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story