விஜய் ஆண்டனி மிரட்டலான நடிப்பில் 'பிச்சைக்காரன் 2'... கவனம் ஈர்க்கும் டிரெய்லர் வெளியீடு !

pichaikaran 2

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 'பிச்சைக்காரன் 2' உருவாகியுள்ளது. ‌விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

pichaikaran 2

இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆன்ட்டி பிகிலி கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மிரட்டலான உருவாகி உள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.‌


 

Share this story