பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, விக்ரம் நடித்த பிதாமகன் உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. மேலும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா உள்பட பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் பணி புரிந்துள்ளார். 

அண்மையில் வி.ஏ.துரை வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பணம் இன்றி அவதிப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. அவரும் ஒரு வீடியோ மூலம் தனது சூழ்நிலையை தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, நடிகர்கள் பலரும் அவருக்கு உதவினர். 

இந்நிலையில், தயாரிப்பாளர் வி.ஏ.துரை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this story