ஹாரரில் மிரட்ட வருகிறது ‘பீட்சா 3’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

pizza 3

அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீட்சா 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.   

சினிமாவில் ஹாரர் த்ரில்லர் படங்கள் எப்போதும் தனி கவனம் பெறும். அந்த வகையில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ‘பீட்சா’. இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது. 

pizza 3

‘பீட்சா 3’ தி மம்மி என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார்.  நடிகர் அஷ்வின் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.இவர்களுடன் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி டீசர் உள்ளிட்ட அப்டேட்டுகளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Share this story