ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘பீட்சா 3’.. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

pizza 3
ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘பீட்சா 3’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹாரர் த்ரில்லரில் உருவாகி வெளியான ‘பீட்சா ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வெற்றிப்பெற்ற நிலையில் அடுத்ததாக உருவாகியுள்ளது ‘பீட்சா 3’ தி மம்மி.  இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் அஷ்வின் நடித்துள்ளார்.  இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.

pizza 3

இவர்களுடன் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே இப்படம் கடந்த மே 12-ஆம் தேதியே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி பணிகள் நடைபெறாததால் சொன்ன தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story