நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பங்கேற்கும் பிரதமர்
1704879091380
ஆனால், 90களில் அவர்கள் இருவருக்கும் இணையாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி. 65 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக நடிப்பில் ஆர்வம் செலுத்துவதை குறைத்துவிட்டு, அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் அவர் உள்ளார். சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவிற்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில், வரும் 17-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளார். இந்த விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் கொச்சி செல்ல உள்ளாராம்.