பழம்பெரும் நடிகை லீலாவதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கன்னட நடிகை லீலாவதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் 

பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (வயது 85). இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெங்களூர் அருகே நீலமங்களத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை லீலாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கன்னட நடிகை லீலாவதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் 

இந்நிலையில், பிரதமர் மோடி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், லீலாவதியின் மரணச் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். சினிமாவின் உண்மையான அடையாளமான அவர், பல படங்களில் தனது நடிப்பால் வெள்ளித்திரையை அலங்கரித்தார் என குறிப்பிட்டுள்ளார். 

Share this story