சென்னையில் போக்கிரி, கத்தி திரைப்படங்கள் மறுவெளியீடு

‘லியோ’ படத்தை முழுவதும் முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#Pokkiri special screening on @RohiniSilverScr.❤️🔥 @Actorvijay #31YearsOfVijayism#31yearsOfThalapathyVijaypic.twitter.com/owXoBdryeM
— T ғ ᴄ™Aʀᴜɴᴀʟᴅᴜ (@Leo_The_Master) December 3, 2023
இந்நிலையில், நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவு அடைகிறது. நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய விஜய்யின் திரைபயணம் லியோ படம் வரை வெற்றிகரமாக செல்கிறது. இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள திரையரங்குகளில் போக்கிரி மற்றும் கத்தி திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன.