மீண்டும் தள்ளிப்போகும் துருவ நட்சத்திரம் திரைப்படம்?

மீண்டும் தள்ளிப்போகும் துருவ நட்சத்திரம் திரைப்படம்?

பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

மீண்டும் தள்ளிப்போகும் துருவ நட்சத்திரம் திரைப்படம்?

இந்நிலையில், மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பணப்பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
 

Share this story