பொங்கல் பண்டிகை ஸ்பெஷல் : இன்று ஒரே நாளில் 3 படங்கள் ரிலீஸ்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஒரே நாளில் கோலிவுட்டில் மூன்று திரைப்படங்கள் திரைக்கு வருகிறது அருண் விஜயின் வணங்கான், ராம் சரணின் கேம் சேஞ்சர், மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் மெட்ராஸ்காரன் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது கேம் சேஞ்சர். ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தை தொடர்ந்து ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தமன் இசையமைத்துள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை நடித்துள்ளனர். மிக முக்கியமாக கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்போடு இப்படம் திரைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இப்படத்திற்கு ஒரு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வர்மா படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடல்களை ஜிவி பிரகாஷ் இசை அமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் கொடுத்துள்ளார். இயக்குனர் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வேளையில் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முதலில் நடிகர் சூர்யா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு சில காட்சிகளையும் நடித்திருந்தார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் மெட்ராஸ்காரன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.