கோலாகலமாக ஜொலிக்கும் மேடை - பிரபலங்களின் வருகையால் அதிரும் அரங்கம்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கி வருகிறது. பல பிரபலங்களின் வருகையால் அரங்கம் அதிர்ந்து வருகிறது.
அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார் மணிரத்தினம். இரண்டு பாகங்களாக தயாரான இந்த படத்தின் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்காக இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக இன்று நடக்கிறது. இந்த விழாவிற்கு பல பிரபலங்கள் சென்னை நேரு அரங்கிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் வந்துள்ளார், ஐஸ்வர்யா ராய், இயக்குநர் சுதா கொங்காரா, மணிரத்தினம், பிருந்தா மாஸ்டர், சுகாசினி மணிரத்தினம் மற்றும் பொன்னியின் செல்வன் பட நட்சத்திரங்கள் பலர் வருகை தந்துள்ளனர்.