பொன்னியின் செல்வனின் “தேவராளன் ஆட்டம்” முழுவீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தேவராளன் ஆட்டம்’ பாடலின் முழுவீடியோ தற்சமயம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது என்றே சொல்லலாம்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘தேவராளன் ஆட்டம்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் முழுவீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
இளங்கோ கிருஷ்ணன் இந்தப் பாடலுக்கு வரிகளை எழுத, பாடகர் இளங்கோ சேகர் பாடியுள்ளார். அதாவது குரவைக் கூத்து சிலப்பதிகார காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. குரவைக் கூத்து எப்படி நிகழும் என்பதற்கும் கல்கி விளக்கங்கள் தந்திருக்கிறார்.அதற்கு மணிரத்னம் உயிர் கொடுத்துள்ளார் என்று கூட சொல்லலாம்,அதுவே இந்த ‘தேவராளன் ஆட்டம்’ ஆட்டத்திற்கு ஏற்றார் போலவே பாடலுக்கு இசையும் கச்சிதமாக அமைந்துள்ளது. தற்பொழுது இந்த பாடலின் முழு வீடியோ பாடலும் வெளியாகியுள்ளது.