'பொன்னியின் செல்வன் 2' படத்தின் நடிகர், நடிகைகளின் சம்பள லிஸ்ட் இதோ!

photo

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியான நிலையில், படத்தின் நடித்த நடிகர்- நடிகைகள் பெற்ற சமபள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

photo

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன், கல்கியின்  பொன்னியின் செல்வன் நாவலை மைய்யமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இத்திரைப்படம் ரிலீஸிற்கு முன்பே ரூ 11 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

photo

இந்த படத்தில் நடித்த நடிகர்- நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என பார்க்கலாம். முதலாவதாக ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்த ஜெயராம் ரூ 1 கோடி வானதியான சோபிதா துலிபாலா ரூ 1 கோடி, பெரிய வேளாராக நடித்த பிரபு ரூ 1 கோடி,  பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லெட்சுமி ரூ 1.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். சுந்தர சோழனாக நடித்த பிரகாஷ் ராஜ் ரூ 1.5 கோடி, குந்தவையான த்ரிஷா ரூ 5 கோடி, வந்தியத்தேவனான கார்த்தி ரூ. 5.5 கோடி,  அருண்மொழி வர்மனான ஜெயம்ரவி ரூ 8 கோடி, நந்தினி, மந்தாயினியான ஐஸ்வர்யா ராய் ரூ10 கோடி, ஆதித்த கரிகாலனான விக்ரம் ரூ 12 கோடி, சம்பளமாக பெற்றுள்ளனர்.

Share this story