‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘ஸ்னீக் பீக்’ வெளியீடு.

பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியீட்டிற்காக படக்குழு தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. அதில், வந்தியத்தேவனான கார்த்தி மற்றும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. தொடர்ந்து முதல் பாகத்தில் புதிருடன் முடிந்த பல கேள்விகளுக்கு பதிலாக இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
The inseparable duo!
— Lyca Productions (@LycaProductions) April 26, 2023
Check out the sneak peek from #PS2 featuring our favourite #Vanthiyathevan and #Nambi!
▶️ https://t.co/pZdMOMy7q1#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam… pic.twitter.com/QOk2aGS3N0