ரீ ரிலீசாகும் ‘பொன்னியின் செல்வன் 1’... நடிகர் பார்த்திபன் விருப்பத்தை நிறைவேற்றிய மணிரத்னம் !

ps1

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இரண்டாம் பாகம் வெளியாகுவதால் அதற்கு முன்னர் முதல் பாகத்தை ரீ ரிலீஸ் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பு இருந்தது.  ‌

 

ps1

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. இது குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்தில் கோரிக்கை வைத்த நிலையில் அதற்கு இயக்குனர் மணிரத்னம் சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தெரிவித்துள்ள பார்த்திபன்,  மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென கேட்டிருந்தார். 

ps1

அதற்கு இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ள பதிலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அந்த பதிலில் சில திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தை ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் வெளியிடும் திட்டம் உள்ளது என்று கூறியுள்ளார். இதே கோரிக்கையை ரசிகர்களும் வைத்த வந்த நிலையில் இது அனைவரிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 


 

Share this story