முதல் பாகத்தை பார்க்காதவர்களும் இரண்டாம் பாகம் புரியும் - PS 1 ரீவைன்ட் வீடியோ வெளியீடு !

ponniyin selvan 2

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

ponniyin selvan 2

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற நாவலாக இருப்பது பொன்னியின் செல்வன். இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அதனால் இந்த நாவலை படமாக்க பல முன்னணி இயக்குனர்கள் முயற்சித்தனர். ஆனால் பலர் முயற்சித்து சாத்தியமாகாத நிலையில் அதை கையில் எடுத்த மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். 

ponniyin selvan 2

அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வெளியாகி அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏற்கனவே முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ponniyin selvan 2

படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இரண்டாம் பாகத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இதையொட்டி 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் ரீவைன்ட் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள மணிரத்தினம், முதல் பாகம் பார்க்காதவர்களுக்கும் இரண்டாம் பாகம் புரியும் என்று கூறியுள்ளார். அதோடு முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 


 


 

Share this story