எந்த படத்துடனும் ஒப்பிடாதீர்கள்... 'பொன்னியின் செல்வன் 2' விழாவில் நடிகை காட்டம் !
'பொன்னியன் செல்வன் படத்தை எந்த படத்துடனும் ஒப்பிடாதீர்கள் என நடிகை குஷ்பூ காட்டமாக தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய நடிகை குஷ்பூ, பொன்னியின் செல்வன் திரைப்படம் உண்மை கதை. உண்மையான கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் சில கற்பனையும் கலக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரும் விஷயங்கள் உண்மையான நடந்தவை என்பதை மறந்துவிடாதீர்கள். அதேபோன்று பொன்னியின் செல்வன் படத்தை மற்ற படங்களுடன் ஒப்பிடாதீர்கள். குறிப்பாக பாகுபலி படத்துடன் ஒப்பிடாதீர்கள் என்று காட்டமாக கூறினார்.
நாம் எப்போதும் எதிர்காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பின்னோக்கி சென்றால் நம்முடைய மிகப்பெரிய வரலாறு புதைந்து கிடைக்கிறது. மதிப்பெண் பெறுவதற்காகவே வரலாறு படித்தோம். தமிழர்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்காகவே இந்த படத்தை மக்கள் திரையரங்குக்கு சென்று பார்த்தனர் என அவர் தெரிவித்தார்.