முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை - நடிகர் பார்த்திபன் !

ps2

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சின்ன பழுவேட்டையராக நடித்துள்ள பார்த்திபன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 

ps2

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பொன்னியின் செல்வன் படத்தில் என்னை போன்று தமிழ் பேசுபவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம். அந்த சந்தோஷத்தில் நெஞ்சில் வாள் ஏந்தி வந்திருக்கிறேன். படத்தை பார்ப்பதற்காக சராசரி ரசிகன் போன்று நானும் காத்திருக்கிறேன். 

ps2

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையே நான் இன்னும் நான் பார்க்கவில்லை. ஏனென்றால் தஞ்சாவூரில் முதல் காட்சியை பார்க்க சென்ற போது ரசிகர்களின் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு படத்தை பார்க்க முடியாமல் போனது. ஆகவே முதல் பாகத்தில் என்ன இருந்தது எனக்கு தெரியாது. அதேபோன்று இரண்டாம் பாகத்தில் என்ன இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்த படத்தில் நான் இருக்கிறேன் என்பது மட்டுமே மகிழ்ச்சி என்று கூறினார். 

 

Share this story