‘சின்னஞ்சிறு நிலவே’... ஆதித்ய கரிகாலன் - நந்தினி இடையே காதலை பேசும் பாடல் !

ps2

‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து ‘சின்னஞ்சிறு நிலவே’ என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லர் படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

ps2

லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ps2

இந்த படம் வெளியான இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஆதித்ய கரிகாலன் மற்றும் நந்தினி இடையே காதல் பேசும் பாடலான சின்னஞ்சிறு நிலவே என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்த பாடலை ஹரிசரண் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story