எம்மாடியாவ்... 300 கோடியா... வசூல் வேட்டையில் ‘பொன்னியின் செல்வன் 2’

ps2

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் 10 நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

மணிரத்னம் இயக்கத்தில் இருபாகங்களாக உருவாகி வெளியானது ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த நாவல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே படமாக உருவானது. லைக்கா தயாரிப்பில் உருவான இந்த படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 

ps2

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நாவலில் சொல்லியதை போன்றே கதாபாத்திரங்கள் தத்ரூபமாக படத்தில் காட்டப்பட்டிருந்து. பெரிய அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாத நிலையில் படத்திற்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 

ps2

இப்படம் மூன்று நாட்களில் 100 கோடியும், 7 நாளில் 200 கோடியும் வசூலித்திருந்தது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

Share this story