பிரம்மாண்டமாக தொடங்கியது ‘பொன்னியின் செல்வன் 2’ ஆடியோ லாஞ்ச்... குவிந்த முக்கிய பிரபலங்கள் !

ps2

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த நாவல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே இருபாகங்களாக உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

ps2

சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. 

ps2

கோலாகலமாக தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், மணிரத்னம், சிம்பு, லைக்கா உரிமையாளர் சுபாஷ்கரண், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா உள்ளிட்ட ஏராளமான முக்கிய கலந்துக்கொண்டுள்ளனர். ரசிகர்கள் ஆரவாரத்தால் விழா அரங்கமே அதிர்ந்து வருகிறது. 

Share this story