‘பாகுபலி’ போன்று ‘பொன்னியின் செல்வன்’ இல்லை.. மக்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா ? - நடிகர் கார்த்தி !

ps2

தமிழ் சமூகம் கொண்டாடும் படமாக மாறிவிட்டது ‘பொன்னியின் செல்வன்’ என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

மணிரத்னத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தை வெளியிடும் பணிகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். 

ps2

அதேநேரம் இப்படத்தை விளம்பரப்படுத்த ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதற்காக படக்குழுவினர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தின் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

ps2

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, எத்தனை முறை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் உங்களிடம் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். எனது பயணம் தொடங்கியதில் இருந்து நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்திருக்கிறீர்கள். இரண்டு, மூன்று தலைமுறைகள் சேர்ந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். 

இந்த படத்தை தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது. அதனால் கல்கி நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ‘பாகுபலி’ போன்று பொன்னியின் செல்வன் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்த்தார்கள். பின்னர் பொன்னியின் செல்வன் இப்படிதான் யதார்த்தமாக இருக்கும் என அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். இதுபோன்ற படங்கள் எப்போதாவது தான் வரும். இந்த படம் ஒரு காவியம் என்று கூறினார். 

 

 

Share this story