“நாம் அறியாத நிறைய விஷயங்கள் பொன்னியின் செல்வனில் உள்ளது” - நடிகர் விக்ரம் !

ps2

நம்மை அறியாத விஷயங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ளதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், அனைவருக்கும் பிடித்த விஷயங்கள் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இருக்கிறது. அதனால் ‘பொன்னியின் செல்வன் 2’ அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படத்தை பாகுபலி போன்று பிரம்மாண்டமான படமாக எடுத்திருக்கலாம். ஆனால் புத்தகத்தின் அடிப்படையிலேயே இப்படத்தை மணிரத்னம் எடுத்திருக்கிறார். 

ps2

பொன்னியின் செல்வன், தங்கலான் ஆகியவை படங்கள் நடித்த பிறகு இதே பாணியில் உருவாகும் படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஓடிடியால் எல்லையே இல்லாமல் பல மொழி திரைப்படங்களை பார்த்து வருகிறோம். நம்மை அறியாத பல விஷயங்கள் மணிரத்னம் படத்தில் உள்ளது. இந்த படம் இவ்வளவு பெரிய அளவில் விளம்பரமானதற்கு காரணம் மணிரத்னத்தின் ஊக்கம் தான் காரணம். 

எனக்கு பிடித்த கதாபாத்திரம் ராவணன் தான். பல மொழி நண்பர்கள் கூட படம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். அது இந்த படத்தின் மூலம்தான் நிகழ்ந்தது. குந்தவை - வந்தியதேவன் காதல் என்ன ஆனது என்பது குறித்தும், ஆதித்ய கரிகாலன் என்ன ஆனார் என்பது குறித்தும் எனக்கு தெரியாது என்று கூறினார். 

 

 

Share this story