இறுதிக்கட்ட பணியில் ‘பொன்னியின் செல்வன் 2’.. லண்டனில் முகாமிட்ட மணிரத்னம் & ஏ.ஆர்.ரகுமான் !

ps2

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் பணிகளுக்காக மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரும் லண்டனில் முகாமிட்டுள்ளனர். 

தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்தது கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல். பல பேர் முயற்சித்த இந்த நாவலை திரைப்படமாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் மணிரத்னம். இரு பாகங்களாக திட்டமிடப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியான நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. 

ps2

இதையொட்டி இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. நேற்று இப்படத்தின் ‘அக நக’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து விரைவில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. இந்த டிரெய்லருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ps2

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி இப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளுக்காக இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் லண்டன் சென்றுள்ளனர். அங்கு பிரபல ஸ்டுடியோ ஒன்றில் இந்த பணிகளை நேரடியாக கவனித்து வருகின்றனர். இது குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.   

 

Share this story