அக நக... செம்ம மெலோடியாய் உருவாகியுள்ள ​‘பொன்னியின் செல்வன் 2’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு !

ps 2

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இரண்டாவது பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ps 2

சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் அருள்மொழி தேவனை ஊமை ராணி காப்பாற்றுவது போல க்ளைமேக்ஸ் இருந்தது. இரண்டாம் பாகத்தில் ஊமை ராணியின் விரிவாக பகுதியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். 

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பாடல் வந்தியதேவன் மற்றும் குந்தவை இடையேயான காதலை பேசும் பாடலாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மெலோடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this story