மனதை வருடும் ‘அக நக’ பாடல்... ‘பொன்னியின் செல்வன் 2’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 60-க்கு முன்பு எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் நாவலை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இதில் உண்மைக் கதையும், சில கற்பனையான விஷயங்களையும் வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் அருள்மொழி தேவனை ஊமை ராணி காப்பாற்றுவது போல க்ளைமேக்ஸ் இருந்தது. இரண்டாம் பாகத்தில் ஊமை ராணியின் விரிவாக பகுதியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் வந்தியதேவன் மற்றும் குந்தவை இடையேயான காதலை கூறும் விதமாக இருக்கிறது. இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்த பாடலை சக்திஸ்ரீ பாடியுள்ளார். மெலோடியாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
The song that left you wanting more is out now!
— Madras Talkies (@MadrasTalkies_) March 20, 2023
Listen now to #AgaNaga #RuaaRuaa #Aaganandhe #Akamalar & #Kirunage.
? https://t.co/eDITJsrKl1#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @IMAX @primevideoIN @Karthi_Offl @trishtrashers pic.twitter.com/VEPBtGmZUE