காதலர் தினத்தில் வெளியாகும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள்... 'பொன்னியின் செல்வன் 2' சூப்பர் அப்டேட்

ponniyin selvan 2

 காதலர் தினத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகும் என கசிந்துள்ளது. 

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ponniyin selvan 2

சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் அருள்மொழி தேவனை ஊமை ராணி காப்பாற்றுவது போல க்ளைமேக்ஸ் இருந்தது. இரண்டாம் பாகத்தில் ஊமை ராணியின் விரிவாக பகுதியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். 

ponniyin selvan 2

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் முதல் பாடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் அருண்மொழி வர்மன் மற்றும் வானதி இடையேயான காதலை பேசும் பாடலாக உருவாகியுள்ளது. விரைவில் இந்த பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.  ‌

 

Share this story