‘PS 2’ டிரெய்லர் லோடிங்.. எப்படி உருவானது டிரெய்லர் ?... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு !

ps 2 trailer

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் எப்படி உருவானது என்பது குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது ‘பொன்னியின் செல்வன் 2’. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. 

ps2

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ps2

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டோர் டப்பிங் பேசும் காட்சிகளும், ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் கம்போசிங் காட்சியும், கிராபிக்ஸ் பணிகள் நடைபெறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது நாளை வெளியாகும் டிரெய்லருக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 


 

Share this story