பொன்னியின் செல்வன் 2-ல் இணைந்த கமலஹாசன்... வீடியோ வெளியீடு !

ps2

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கும் நடிகர் கமலஹாசன் தொடக்க காட்சிக்கு குரல் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். 

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. சோழர்களின் வரலாற்றை காவியமாக அமரர் கல்கி, பொன்னியின் செல்வன் நாவலாக கற்பனை கலந்து எழுதியிருந்தார். இந்த நாவல் தற்போது இரு பாகங்களாக திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. 

ps2

இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ps2

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் தொடக்க காட்சிக்கு உலக நாயகன் கமலஹாசன் குரல் கொடுத்திருந்தார். அதேபோன்று தற்போது இரண்டாம் பாகத்திற்கும் அவரே கொடுத்துள்ளார். இந்த தொடக்க காட்சியின் வீடியோ தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளளது. 

 

Share this story