வீரா ராஜ வீரா... இன்று மாலை வெளியாகும் லிரிக்கல் பாடல்... ‘பொன்னியின் செல்வன் 2’ புதிய அப்டேட்

ps2

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் லிரிக்கல் வீடியோ பாடல் இன்று மாலை வெளியாகிறது. 

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த நாவல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே இருபாகங்களாக உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

ps2

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாரான இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. 

இதையடுத்து இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திலிருந்து வீரா ராஜ வீரா என்ற லிரிக்கல் வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அருண்மொழி வர்மன் மற்றும் வானதி இடம்பெறும் இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story